• Jan 12 2025

கவுண்டமணி வழக்கில் திடீரென நடந்த ட்விஸ்ட்.. அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

90 ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் உச்ச காமெடி நடிகராக திகழ்ந்து வந்தவர் தான் கவுண்டமணி. இவர் கிட்டத்தட்ட நடிகர்களுக்கு சமமாக சம்பளம் வாங்கியவர்.

அதன்பின், 1996 ஆம் ஆண்டு கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவருக்கு சொந்தமான 5 கிரவுண்ட் மற்றும் 454  சதுர அடி நிலத்தை கிரையம் செய்து, அங்கு வணிக வளாகம் ஒன்றை கட்டுவதற்காக திட்டமிட்டுள்ளார்.

அதன்படி ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற நிறுவனத்திடம் அந்த இடத்தை ஒப்படைத்த கவுண்டமணி, 22 700 சதுர அடி பரப்பில் வளாகம் ஒன்றினை 15 மாதங்களில் கட்டி முடிக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டுள்ளார். அதற்காக 3.58 கோடியும் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனாலும் அந்த கட்டிடத்தை கட்டி முடிக்காமல் குறித்த நிறுவனம் காலம் தாழ்த்தி வந்துள்ளதோடு, 2004 ஆம் ஆண்டு முழுமையாகவே கட்டுமான பணிகளை கைவிட்டது.


இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திற்கு எதிராகவும் தனது சொத்தை மீட்டுத் தருமாறும் கடந்த 2006 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு போட்டுள்ளார் கவுண்டமணி.

தற்போது இதற்கு சாதமாக தீர்ப்பு வந்துள்ளது. அத்துடன் உரிமை என்று சொத்தை ஆக்கிரமித்துள்ளதால் அவருக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும்  உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் கட்டுமான நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு  செய்துள்ளது. இதனால் தற்போது  அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisement

Advertisement