• Dec 26 2024

திடீரென தலையில் அடித்துக் கதறிய செழியன்! பேரிடியாய் கிடைத்த தபால் கடிதம்! சுக்குநூறாக உடைந்தது பாக்கியா குடும்பம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலின் இன்றைய எபிசோட் வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், தன்னிடம் வேலை செய்த பெண்களுக்கு சம்பளம் கொடுக்கிறார். அத்துடன் இத்தனை நாளா பொறுமையா இருந்ததுக்கு நன்றியும் சொல்லுகிறார். அதைப் பார்த்து ராமமூர்த்தி பெருமைப்படுகிறார். ஈஸ்வரியும் அவங்களோட அளவா இரு என அட்வைஸ் பண்ணுகிறார். அமிர்தாவுக்கும் பணம் கொடுக்கிறார். அவர் முதலில் மறுத்தாலும் பின்பு வாங்கிக் கொள்கிறார். எழிலுக்கும் அவரிடம் வாங்கிய காசை கொடுக்குமாறு பணம் கொடுக்கிறார்.


இதை தொடர்ந்து கணேஷ் விஷயத்தை பற்றி சொல்ல முன் சாமியிடம் வேண்டிக் கொள்கிறார். அப்போது கோபியும் ராதிகாவும் வர, உங்ககிட்ட பேசணும் என கோபியிடம் சொல்லிவிட்டு, எல்லாரையும் கூப்பிட செல்லுகிறார்.

அதன்படி, எல்லாரையும் கூப்பிட்டு அமர வைத்து, நடந்தவற்றை சொல்ல ஆரம்பிக்கும் போது, அங்கு தபால் காரர் வந்து செழியனுக்கு போஸ்ட் வந்து இருக்கு என்று சொல்ல, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.


லெட்டரை வாங்கி படித்த செழியன் பார்த்ததும் அழுகிறார். ஜெனி தனக்கு டிவோஸ் பேப்பர் அனுப்பி இருக்க என்று, எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ஈஸ்வரி ஜெனியின் அப்பாக்கு போன் எடுக்க சொல்ல, கோபியும் எடுக்கிறார். ஆனாலும் அவர் போன் எடுக்கவில்லை. ஈஸ்வரி கோவத்தில் வாங்க ஜெனி வீட்டுக்கு போவம் என சொல்ல, கொஞ்சம் பொறுமையா இருக்குமாறு ராமமூர்த்தி சொல்லுகிறார்.

செழியன் ரூமுக்கு போய் விம்மி விம்மி அழ கோபியும், ராதிகாவும் சமாதானம் செய்கின்றனர்.

Advertisement

Advertisement