• Dec 26 2024

மீனாவுக்கு தங்க வளையல் போட்டு பல்பு வாங்கிய சுதா.. ரோகிணி கொடுத்த வார்னிங்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் முத்துவின் ஷர்ட்டை பார்த்து போகும் போது வேற ஷர்ட் போட்டு இருந்தா, இப்ப என்ன ஷர்ட் போட்டு இருக்கா? என்ன நடந்தது  என்று கேட்க, மீனா முத்துவும் மாறி மாறி பதில் சொல்லுகின்றார்கள். ஆனாலும் இறுதியில் ஒரு மாதிரி சமாளிக்க இது நம்புற மாதிரி இல்லை என்று சொல்லி விடுகிறார்கள். 

அதன் பிறகு ரோகிணி மீனாவிடம் வந்து உங்க வீட்டு என்ன நடந்துச்சு. உங்க முகமும் சரியில்ல, முத்துவும் கோவமா இருக்கிறார் என்று கேட்க, அது எதுக்கு உங்களுக்கு என்று கேட்க, இப்ப புரியுதா உங்க  பர்சனல் தலையெட்டா அவ்வளவு கோபம் வருது அதை போல தான் மத்தவங்களுக்கும் என்று வார்னிங் கொடுக்கிறார் ரோகிணி.

அதன் பிறகு திருமண நாள் கொண்டாட்டத்திற்காக  டெக்கரேஷன் ஏற்பாடுகள் நடக்க, ஸ்ருதியும் ரவியும் வெளியே சென்று வருவதாக கிளம்பி செல்கிறார்கள். மறுபக்கம் சத்யா சிட்டியை சந்திக்க, சத்யா அக்காவின் திருமண நாளுக்கு அம்மாவும் சீதாவும் போயிருக்காங்க என்று சொல்கிறார்.

அதற்கு நீ போகலையா என்று கேட்க, நான் வாங்கி கொடுத்த சட்டையை அவர் தூக்கி போட்டுட்டு போயிட்டார். நான் போனா எனக்கு மரியாதை இருக்காது என்று சொல்ல, மாமன் மச்சான் உறவு என்றால் சும்மா இல்ல என்று சொல்லி அவரிடம் காசு கொடுத்து அனுப்பி வைக்கிறார். சத்யா அங்கு போனா முத்து கோபப்படுவார். மீனாவுக்கும் முத்துவுக்கும் பிரச்சினை நடக்கும் கல்யாண நாள் சந்தோஷமா இருக்கக் கூடாது என்று சிட்டி கணக்கு போட்டு அனுப்பி வைக்கிறார்.


அடுத்ததாக ஃபங்ஷன் ஆரம்பமாக ஸ்ருதியும் ரவியும் பெரிய கேக் கொண்டு வீட்டுக்கு வருகிறார்கள். அதைப் பார்த்து மனோஜ் இவ்வளவு பெரிய கேக்கா என வாயை பிளக்குறார். அங்கு சுதாவும் வர, எல்லாரும் தள்ளி நில்லுங்க. பிறகு ஏதும் காணாமல் போன நம்மல தான் சொல்லுவாங்க என்று முத்து சொல்ல, அமைதியாக இரு ஒரு ஃபங்ஷன்ல தொடங்கின பிரச்சினை இன்னொரு பங்க்ஷன்ல தான் முடியும் என்று முத்துவை ஆஃப் பண்ணுகிறார்கள்.

ஆனாலும் பரவால்ல சம்பந்தி ஏதோ தெரியாம தப்பு நடந்துடுச்சு என்று மீனாவுக்கு திருமண நாள் வாழ்த்து சொல்லி தங்க வளையலை கிப்ட் ஆக கொடுக்க, விஜயா வாய் அடைத்துப் போகிறார். இதன் போது உங்களுக்கு பெரிய மனசு பொண்ண பெத்தவங்க கூட ஒன்றும் செய்யால. ஆனா நீங்க தங்க வளையல் போடுறீங்க என்று சொல்ல, மீனாவும் என் பொண்ணு போலத்தான் என்று மீனாவுக்கு தங்க வளையலை போட போக, மீனா ஒரு நிமிஷம் என்று சொல்லி அந்த வளையலை ஸ்ருதியின் கையில் போடுகிறார்.

இதை பார்த்த அண்ணாமலை தனக்கு வந்ததை கூட மீனா அடுத்தவங்களுக்கு கொடுக்குற மனசு இருக்கு பாரு அது மீனாவுக்கு மட்டும் தான் வரும் மருமகள்னா இப்படித்தான் இருக்கணும் என்று விஜயாவுக்கு பதிலடி கொடுக்கிறார்.

முதலாவது திட்டம் ஃபெயிலியர் ஆனதும் அடுத்து ஹாலில் ஏசி இல்லையா நான் பெரிய கேசட் ஏசி அனுப்பவா என்று கேட்க, விஜயா சந்தோஷப்படுகிறார். ஆனால் அண்ணாமலை அது எல்லாம் வேணா உங்க ஆசி மட்டும் உங்க பொண்ணுக்கு போதும் என்று சொல்ல, முத்து சூப்பர் பா என கை தட்டுகிறார்.

இறுதியாக முத்து மீனா கேக் கட் பண்ணி மாறி மாறி ஊட்டி  கொண்டு மற்றவர்களுக்கு ஊட்டி  விடுகிறார்கள். மீனா சுதாவுக்கு கேக் கொடுக்க நான் ஸ்வீட் சாப்பிட மாட்டேன் என்று விஜயாவிடம் கொடுத்து நான் கிளம்புகிறேன் என்று சொல்ல, அண்ணாமலை கையெடுத்து கும்பிட்டு போயிட்டு வாங்க என்று அனுப்பி வைக்கிறார் இதுதான் இன்றைய .

Advertisement

Advertisement