தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கிய சுஜிதா தனுஷ், இன்று சின்னத்திரையில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். பல வருடங்களாக தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அவர், தற்போது பல தொடர்களில் பிசியாக இருந்து வருகிறார்.

நடிப்பைத் தாண்டி, மலையாளத்தில் பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் குரலும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தனது குரல் திறமையாலும் அவர் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
குறிப்பாக, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் “தனம்” என்ற மூத்த அண்ணி கதாபாத்திரத்தில் நடித்தது, அவருக்கு பெரும் புகழை பெற்றுக் கொடுத்தது. அந்த கதாபாத்திரத்தின் மூலம் குடும்ப ரசிகர்களிடையே அவர் ஒரு தனி இடத்தைப் பிடித்தார்.
சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சுஜிதா, அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எளிமையான அழகுடன், ஸ்டைலிஷான லுக்கில் காட்சியளிக்கும் அந்த போட்டோஸ், பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளன.
Listen News!