• Dec 26 2024

சன் டிவியின் புதிய சீரியலுக்கு தனுஷ் பட டைட்டில்.. வித்தியாசமே இருக்கே?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

சன் டிவி, விஜய் டிவி ஆகிய இரண்டு டிவிகளிலும் சில தொடர்கள் முடிவடைவதை அடுத்து புதிய சீரியல்கள் தொடங்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது என்றும் ஒரு சில சீரியல்களின் படப்பிடிப்பும் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக சன் டிவியில் கூடிய விரைவில் சில சீரியல்கள் தொடங்க இருப்பதாகவும் அதில் சரிகமபத நிறுவனம் மட்டுமே இரண்டு சீரியல்களை ஆரம்பிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சரிகமபத நிறுவனம் ஆரம்பிக்கும் ஒரு சீரியலின் டைட்டில் ’மல்லி’ என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது இன்னொரு சீரியலின் டைட்டில் குறித்த தகவல் கசிந்து உள்ளது.



இந்த புதிய சீரியலில் டெல்னா டேவிஸ், சல்மான் மற்றும் அக்சயா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க இருப்பதாகவும் இந்த சீரியலின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக ஏற்கனவே டெல்னா டேவிஸ் தனது சமூக வலைத்தளத்தில் சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்திருந்தார் என்பதை பார்த்தோம்.

 இந்த நிலையில் தற்போது இந்த சீரியலின் டைட்டில் ’ஆடுகளம்’ என்று தெரியவந்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படத்தின் டைட்டில் சீரியல் டைட்டில் ஆக கொண்டு வந்துள்ளனர். பொதுவாக சீரியலில் ஹீரோ பெயர் அல்லது ஹீரோயின் பெயர் அல்லது இருவரையும் சேர்த்த பெயர்கள் தான் டைட்டில் வைப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இந்த சீரியலின் டைட்டில் வித்தியாசமாக உள்ளதை அடுத்து எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

’ஆடுகளம்’ சீரியலின் கதை என்ன? இன்னும் எந்தெந்த நட்சத்திரங்கள் எல்லாம் நடிக்க உள்ளனர் என்பது குறித்த தகவல்களை அவ்வப்போது பார்ப்போம்.

Advertisement

Advertisement