• Oct 26 2024

TRP டாப் 05 ரேட்டிங்கில் மிஸ்ஸான சன் டிவி சீரியல்? அசுர வேகத்தில் பிளந்து கட்டும் விஜய் டிவி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இவ்வாறு ஒளிபரப்பாகும் சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் போட்டி போட்டு முன்னிலைக்கு வருவதோடு, புகழினையும், விளம்பரங்களையும் பெற்று வருகின்றன.

அந்த வகையில் இல்லத்தரசிகள் முதல் இளம் ரசிகர்கள் வரை, தினம் தோறும் பார்த்து ரசிக்கப்பட்டு வரும், சீரியல்களில் டாப் லிஸ்ட் ரேட்டிங்கை கைப்பற்ற சீரியல்கள் போட்டி போட்டு வருகின்றன.

இந்த நிலையில், 14ம் வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் இடம்பெற்ற முதல் ஐந்து சீரியல்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.


அதன்படி, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரமும் 9. 46 புள்ளியை பெற்று முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது. கயல் சீரியல் 8.86 புள்ளியை பெற்று இந்த வாரமும் இரண்டாவது இடத்திலையே காணப்படுகின்றது.


சுந்தரி சீரியல் காணப்பட்ட நிலையில், இந்த வாரம் எதிர்நீச்சல் சீரியல் 8.67 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்திலும்,  நான்காவதாக விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலும் காணப்படுகின்றது.

இதை தொடர்ந்து, வானத்தைப்போல சீரியல், இனியா சீரியல்,  பாக்கியலட்சுமி சீரியலும் காணப்படுகிறது.

இவ்வாறு விஜய் டிவி சீரியல் தற்போது தொடர்ந்தும் முதல் ஐந்து இடத்திற்குள் வந்துள்ளதோடு, இம்முறை சன் டிவியின் சுந்தரி சீரியல் முதல் ஐந்து பட்டியலிலும் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement