• Jun 15 2026

வைகைப்புயலை தட்டித் தூக்கிய சன் டிவி.. ஆனாலும் வடிவேலு உயிருக்கு ஆபத்தா? வைரல் ப்ரோமோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்தாவது சீசனில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டுள்ளது.

எனினும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த நான்கு சீசன்களிலும் நடுவராக காணப்பட்ட வெங்கடேஷ் பட், இதன் ஐந்தாவது சீசனில் கலந்து கொள்ளாமல் விலகி இருந்தார். அதன்பின் சன் டிவியில் புதிதாக  டாப் குக்கு, டூப் குக்கு என்ற சமையல் நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியும் அண்மையில் தான் ஆரம்பிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் காமெடிர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி போலவே இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வந்தார்கள்.


இந்த நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக  டாப் குக்கு, டூப் குக்கு நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு வந்து கலந்து கொண்டுள்ளார். அதன்படி, அடுத்த வாரம் எபிசோட்டுக்கு அவர் கெஸ்ட்டாக வந்துள்ள ப்ரோமோ தற்போது வெளியாகி இணையதில் வைரலாகி வருகின்றது.


இதேவேளை, இந்த ஷோவின் டைட்டில் இன்ட்ரஸ்டிங்கா இருக்குது என்று சொன்ன வடிவேலு, அங்கு செய்து கொடுத்த முறுக்கை சாப்பிட்டதும் இதுல என் உயிருக்கு ஆபத்து இருக்கா என காமெடி பண்ணிய காட்சிகளும் தற்போது இணையத்தில் வைரலாகி  வருகின்றது.


Advertisement

Advertisement