• Dec 26 2024

அட்லி, முருகதாஸை அடுத்து பாலிவுட் செல்லும் சுந்தர் சி.. ‘அரண்மனை’ படத்தின் ரீமேக்கா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரை உலக இயக்குனர்கள் கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் பக்கம் சென்று கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பாக அட்லி, பாலிவுட்டின் பாட்ஷா என்று கூறப்படும் ஷாருக்கான் நடித்தஜவான்படத்தை இயக்கினார் என்பதும் அந்த படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே

 இந்த நிலையில் அட்லியை அடுத்து ஏஆர் முருகதாஸ் பாலிவுட் செல்ல உள்ளார் என்பதும் அவரது அடுத்த படத்தில் சல்மான் கான் நாயகனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏஆர் முருகதாஸ் மற்றும் சல்மான் கான் இணையும் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் 2025 ஆம் ஆண்டின் ரம்ஜான் தினத்தில் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

 இந்த நிலையில் அட்லி, முருகதாஸை அடுத்து சுந்தர் சி பாலிவுட் செல்ல உள்ளார் என்றும் அவரது இயக்கத்தில் உருவானஅரண்மனைபடத்தின் ஹிந்தி ரீமேக் தான் இந்த படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் நடிக்க  அக்ஷய் குமார் மற்றும் பாபி தியோல் ஆகிய இருவரும் ஒப்புக்கொண்டு உள்ளதாகவும், இருவரும்அரண்மனைபடத்தின் தமிழ் பதிப்பை பார்த்து உடனே இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது

 இந்த நிலையில்அரண்மனைபடத்தில் நான்காம் பாகம் தமிழில் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தை ரிலீஸ் செய்தவுடன் சுந்தர் சி பாலிவுட் படத்தை இயக்கும் பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ’அரண்மனைமுதல் பாகம் பாலிவுட்டில் வெற்றி பெற்றால் அடுத்தடுத்த பாகங்களை இயக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Advertisement

Advertisement