• Dec 26 2024

திடீரென இரண்டாம் திருமணம் செய்த சன்டிவி நடிகை.. மாப்பிள்ளை யாரு தெரியுமா?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெள்ளித்திரை நட்சத்திரங்களை விட  சின்னத்திரை நட்சத்திரங்கள் நாளாந்தம் ஒளிபரப்பாகும்  சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் கவரப்பட்ட நடிகர்களாக வலம் வருகின்றார்கள்.

விஜய் டிவி, சன் டிவி ஆகியவை இதற்காகவே போட்டி போட்டு புதிய புதிய சீரியல்களை ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் நடிக்கும் நாயகி, நாயகன் மற்றும் வில்லிகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளானாலும் மிகவும் ஃபேமஸ் ஆன நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகிறார்கள்.

அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம், குலதெய்வம் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் ஸ்ரீரித்திகா. அவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர்.


இந்த நிலையில், தற்போது திடீரென தனக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ஆர்யன் உடன் இருக்கும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்த ஸ்ரீ ரித்திகா,தற்போது நாங்கள் பெற்றோர் சம்பத்துடன் பதிவு திருமணம் செய்து கொண்டதாக   இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

GalleryGallery

Advertisement

Advertisement