• Dec 26 2024

’வேட்டையன்’ படத்தின் கதையில் திடீர் திருப்பம்.. ரஜினியின் கேரக்டரில் இவ்வளவு சஸ்பென்ஸா?

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ளதாகவும் அதில் 10 நாட்கள் மட்டுமே ரஜினியின் காட்சிகள் படமாக்கப்பட வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது. ’வேட்டையன்’ படத்தின் கதை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில் தற்போது போலி என்கவுண்டர் குறித்த கதை அம்சம் தான் இந்த படத்தின் மெயின் கதை என்றும் அதில் சில கிளைக் கதைகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


கடந்த 1980 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஒரு போலி என்கவுண்டர் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் அதை மையமாக வைத்து தான் இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு இருப்பதாகவும்,  ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் நடிப்பதாகவும் போலி என்கவுண்டர் செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கும் ரஜினிக்கும் இடையே நடக்கும் பரமபத விளையாட்டு தான் இந்த படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை என்றும் கூறப்படுகிறது. மேலும் அவருடைய கேரக்டரில் ஒரு முக்கிய சஸ்பென்ஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் இதுவரை எத்தனையோ போலீஸ் கேரக்டரில் நடித்து இருந்தாலும் இது வித்தியாசமான கேரக்டர் என்றும் இதுவரை போலிஸ் என்றால் வில்லனுடன் தான் மோதுவார்கள் என்ற நிலையில், முதல் முறையாக இந்த படத்தில் போலீசுடன் போலீஸ் மோதும் காட்சிகள் இருப்பதால் தமிழ் சினிமாவுக்கு இந்த கதை புதிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாஸில், ரானா டகுபாய், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர் உள்பட பலர் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக  வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement