• Dec 25 2024

நவராத்திரி கொலுவில் அமர்ந்த சூப்பர் ஸ்டார்... ரசிகனின் ரஜனி கோவில்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஒருவர். தமிழகத்தின் மதுரையில் உள்ள தனது வீட்டின் வளாகத்தில் தலைவாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலைக் கட்டியுள்ளார்.தன்னைத்தானே ரஜினி ரசிகனாகக் கூறிக்கொள்ளும் கார்த்திக், தனது வீட்டின் ஒரு பகுதியை கோவிலாக மாற்றி, அங்கு நடிகரின் சிலையையும் நிறுவியுள்ளார். 


இது தொடர்பாக அவர் கூறுகையில் ரஜினியின் சிலை 250 கிலோ எடை கொண்டது."எங்களுக்கு. ரஜினிகாந்த் கடவுள். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கோவில் கட்டியுள்ளேன்." என்று அவர் ANI இடம் கூறினார்.கார்த்திக்கின் மகள் அனுஷியாவும் ரஜினிகாந்த் மீது தனது அபிமானத்தை தெரிவித்துள்ளார் கோவிலில் எப்படி கடவுளை வணங்குகிறோமோ அப்படித்தான் ரஜினிகாந்த் சிலையையும் வணங்குகிறோம் என்றார். 


இந்நிலையில் தற்போது நவராத்திரிக்கு கொலு வைப்பதுபோல ராஜனிகாந்த்தின் அனைத்து படங்களின் ஸ்டில்களையும் வைத்து நவராத்திரி கொண்டாடிவருகிறார். அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வருகிறது.  



Advertisement

Advertisement