• Dec 26 2024

என்னை தத்து எடுத்தீங்களா? பெற்றோரிடம் எடக்குமுடக்கான கேள்வி கேட்கும் சாய் பல்லவி- இது தான் விஷயமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. 

அதன்பின்னர் விஜய் இயக்கத்தில் வெளியான 'தியா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.பின்னர் 'மாரி 2', 'என்.ஜி.கே', 'கார்க்கி' என பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 

இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

சினிமாவில் இந்த அளவுக்கு கலக்கி வரும் சாய் பல்லவி நிஜத்தில் டாக்டர் படிப்பை முடித்திருப்பவர்.


சாய் பல்லவி பார்க்க வெள்ளையாக இருக்கிறார், ஆனால் அவரது அப்பா மற்றும் அம்மா இருவருமே டஸ்கி என்பதால் ஒரு சந்தேகம் வந்ததாம்.என்னை தத்தெடுத்தீங்களா என அவர் பெற்றோரிடம் சென்று சண்டை போட்டாராம். பார்க்கவும் உங்களை போல நான் இல்லையே என்றும் சாய் பல்லவி கேட்பாராம்.

'நீயும் உன் தங்கையும் ஒரே மாதிரி தானே இருக்கீங்க' என சொல்லி அவரது பெற்றோர் சாய் பல்லவியை சமாளிப்பார்களாம். இந்த விஷயத்தை சாய் பல்லவி சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement