• Dec 27 2024

கொட்டுக்காளி படத்தில் நடிக்க தொண்டையை டேமேஜ் பண்ணிய சூரி! எப்படி தெரியுமா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் சூரி. இவர் ஆரம்பத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து, அதன் பின்பு காமெடியில் கலக்கி வந்த இவர் தற்போது வெற்றி நாயகனாக வலம் வருகின்றார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படங்களில் முக்கியமாக காமெடியில் கலக்கி வந்தவர் தான் சூரி. ஒரு கட்டத்தில் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் நாயகனாக நடித்தார். 

இந்த படத்தில் நடிகர் சூரியின் அபரீத தனமான நடிப்பை பார்த்து பலரும் மிரண்டு போயிருந்தனர். அதன் பின்பு சூரியை தேடி பல இயக்குனர்கள் படையெடுத்தார்கள். சமீபத்தில் சூரியின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கருடன். இந்த படமும் மாபெரும் வெற்றி கண்டது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலிலும் 100 கோடி ரூபாய் பெற்றது.

இதை தொடர்ந்து கூழாங்கல் படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் ராஜ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த கொட்டுக்காளி படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொட்டுக்காளி படத்தில் நடிப்பதற்காக நடிகர் சூரி எடுத்த ரிஸ்குகளை பிரபல சேனல் ஒன்றில் பேட்டியாக கொடுத்துள்ளார். தற்போது இந்த விடயங்கள் வைரல் ஆகி வருகின்றன.


அதில் அவர் கூறுகையில், கொட்டுக்காளி  படத்திற்கு என் தொண்டையை டேமேஜ் பண்ணனும் என்று டாக்டர் கிட்ட சொன்னேன். ஆனால் அவர் அப்படியெல்லாம் பண்ண முடியாது என சொல்லிட்டாரு..

ஆனாலும் சினிமாவுக்காக நான் வேண்டுமென்றேன். அதற்கு அவர் இப்படியெல்லாமா சினிமா எடுப்பாங்க என்று கேட்டார். தனக்கு சரி பண்ண தான் தெரியும் டேமேஜ் பண்ண தெரியாது என சொன்னார். எனினும் நான் இந்த படம் எனது கேரியரில் முக்கியம் என சொன்னேன். 

அதன் பிறகு நாட்டு வைத்தியத்தின் படி சில இன்கிரிடியன்ஸ் எழுதி தந்தார். அதனை எனது அசிஸ்டண்டிடம் சொல்லி மிகவும் கஷ்டப்பட்டு தேடி எடுத்து பயன்படுத்தினேன். அதை சாப்பிட்டு தான் தொண்டையை டேமேஜ் பண்ணி நடித்தேன் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement