• Dec 27 2024

மனோஜ் பிச்சையெடுக்க காரணமே நீங்க தான் ஆண்டி... பிளேட்டை திருப்பி போடும் ரோகிணி? அடுத்தது என்ன?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 சீரியல்களில் நான்காவது இடத்தைப் பெற்று முன்னிலைக்கு  முன்னேறியுள்ளது.

இந்த சீரியலில் கனடா வேலைக்கு போக வேண்டும் என அடம் பிடித்த மனோஜ், சாமியாரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தான் கோடீஸ்வரராக வேண்டும் என்ற எண்ணத்தில் கோவில் வாசலில் இருந்து பிச்சை எடுத்துக் கொண்டுள்ளார்.

அவர் பிச்சை எடுக்கும் கோவிலுக்கே மீனா சென்ற நிலையில், அவரை அங்கு பார்த்து, முத்துவுக்கு போனை போட்டு அங்கு வரவழைக்கிறார். அதன் பின்பு முத்து மனோஜிடம் இங்க என்னடா பண்ணுறாய் என அவரை திட்டி வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றார். 

பிச்சைக்காரன் வேடத்தில் இருக்கும் மனோஜை வீட்டுக்கு முத்து அழைத்துச் சென்ற நிலையில், பிச்சைக்காரனையும் வீட்டுக்கு கூட்டி வந்துட்டிய என முத்துவுக்கு பேசுகிறார். அதன்பின் அந்த பிச்சைக்காரன் மனோஜ் தான் பார்த்ததும் அதிர்ச்சியாகி நிற்கிறார். இதுதான் இன்றைய தினம் வெளியான ப்ரோமோ.


இனி இந்த சீரியல் எவ்வாறு நகரும் எனப் பார்த்தால், மனோஜ் பிச்சை எடுக்கும் விடயம் தற்போது விஜயா, அண்ணாமலை, முத்து, மீனாவிற்கு தான் தெரியும். இதை அடுத்து வீட்டுக்கு ரோகிணி வந்தால் இதுதான் சான்ஸ் என  நினைத்து, எல்லாம் உங்களால தான் ஆண்டி.. என்ட  சிட்டுவேஷன் தெரியும். நீங்க மனோஜ்க்கு ஹெல்ப் பண்ணி இருந்தா அவருக்கு இந்த நிலைமை வந்திருக்காது என அழுது புலம்பி பிளேட்டை திருப்பி போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி இல்லாவிடில் ஏற்கனவே மனோஜ் பொய் சொல்லி வேலைக்கு செல்லாமல் பார்க்கில் இருந்த விஷயத்தின் போதும், அவர் ஹோட்டலில் வெயிட்டர் வேலையில் செய்த விஷயத்தின்போதும் மனோஜை கண்டபடி ரோகிணி திட்டி இருந்தார். தற்போது மனோஜ் பிச்சை எடுத்த விஷயம்  ரோகிணிக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்பது புதிராகவே காணப்படுகிறது. 

அத்துடன் விஜயாவுக்கு செல்லப் பிள்ளையான மனோஜ், இவ்வளவு தூரம் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு சென்ற பிறகு அவர் வீட்டை அடகு வைத்து பணம் கொடுப்பாரா அல்லது அவ்வாறு பணம் கொடுத்தால் நாமும் நடுத்தெருவுக்கு தான் போக வேண்டும் என்று சொன்னது போலவே விடாப்படியாகவே பணம் கொடுக்காமல் இருப்பாரா? அல்லது மீண்டும் ரோகிணியிடம் உங்க அப்பா இல்லாட்டி மாமா கிட்ட கேட்டு மனோஜ்க்கு 14 லட்சம் வாங்கி கொடு என கட்டளையிடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எனினும் வீட்டு பத்திரத்தை வைத்து இனி பணம் தர மாட்டேன் என விஜயா  சொன்ன நிலையில், மனோஜ் பிச்சை எடுத்ததற்கு காரணம் நீயும் தான் என ரோகிணிக்கு தான் மீண்டும் ஆப்பு வைப்பாரா என்பதை பார்ப்போம்.






Advertisement

Advertisement