• Dec 26 2024

தங்கமயிலுக்கு பிடிக்கலையாமே.. அப்ப பிரச்சனை வருமா? வெளியே வந்தது பதுக்கி வைத்த பணம்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் நேற்றைய எபிசோடில் நிச்சயதார்த்தத்துக்கு புடவை எடுக்க பாண்டியன் குடும்பத்தினர் சென்றனர் என்பதையும் ஜவுளிக்கடையை புரட்டி போட்டு பாண்டியன் வீட்டு பெண்கள்  சேலையை   செலக்ட் செய்து கொண்டிருந்த காட்சிகள் இருந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் ஒரு வழியாக புடவையை செலக்ட் செய்து விட்டார்கள். குறிப்பாக நான்கு  சேலையை   செலக்ட் செய்து அதில் தங்க மயிலுக்கு எது நன்றாக இருக்கும் என்று சரவணனிடம் கேட்க, சரவணன் பச்சைக் கலர் சேலையை செலக்ட் செய்ய, அதையே பாண்டியன் குடும்பத்தினர் எடுத்து விட்டனர்.

ஆனால்  அந்த சேலையை புகைப்படம் எடுத்து தங்கமயிலுக்கு அனுப்பிய நிலையில் தங்கமயிலுக்கு அந்த டிசைன் பிடிக்கவில்லை என்று கூறுகிறார். ஆனாலும் அவரது அம்மா, அப்பா, தங்கை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, பிடித்திருக்கிறது என்று சொல் என்று சொல்ல, பிடிக்காததை எப்படி பிடித்தது என்று சொல்ல முடியும் என்று முதலில் தங்கமயில் மறுத்தாலும் அதன் பிறகு வேறு வழியின்றி சேலை பிடித்து இருப்பதாக சொல்லிவிட்டார். அதைக் கேட்டு சரவணன் மகிழ்ச்சி அடைய குடும்பத்தினர் சந்தோஷமாக சேலை எடுத்துவிட்டு ஜவுளிக்கடையில் இருந்து வெளியேறும் காட்சிகள் இன்றைய எபிசோடில் உள்ளன.



இன்னொரு பக்கம் தங்கமயில் குடும்பத்தினர் கல்யாண செலவுக்கு என்ன செய்வது என்று யோசனையில் உள்ளனர். தங்கமயில் அப்பா தன்னிடம் நாற்பதாயிரம் ரூபாய் மட்டும் தான் இருக்கிறது, ஆனால் ஒரு லட்ச ரூபாய் குறைந்தது செலவாகும் என்று கூற அப்போது வேறு வழியில்லாமல் தங்கமயிலின் அம்மா பருப்பு டப்பா,  உண்டியல் என தான் சேர்த்து வைத்திருந்த எல்லா பணத்தையும் எடுத்து இதில் ஒரு 48 ஆயிரம் ரூபாய்  இருக்கிறது, இதை கல்யாண செலவுக்கு வைத்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.

இதை பார்த்து தங்கமயில் குடும்பத்தினர் ஆச்சரியமடைந்தனர். நீ கூட இவ்வளவு சேர்த்து வைத்திருக்கிறாயா என்று எல்லோரும் கூற ஒரு வழியாக திருமணத்தை முடித்து விடலாம் என்று முடிவு செய்கின்றனர்.

 இந்த நிலையில் தங்க மயிலுக்கு சேலை பிடிக்காததால் அதிருப்தி அடைந்த நிலையில் அது பிரச்சினையாக மாறுமா? பதுக்கி வைத்த பணத்தை வெளியே எடுத்துள்ள தங்கமயில் அம்மா, அதை திருமணத்திற்கு முழுமையாக செலவு செய்வாரா? திருமணம் பிரச்சனை இல்லாமல் நடைபெறுமா? என்பதை அடுத்தடுத்து எபிசோடுகளில் பார்ப்போம்.

Advertisement

Advertisement