• Jan 10 2025

சூர்யாவுக்கு கொஞ்சமும் செட்டாகி இருக்காது.! அருண் விஜய்க்கு கிடைத்த மாபெரும் வெற்றி

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென தனிப் பாதையை உருவாக்கி அதில் பயணிப்பவர் தான் இயக்குநர் பாலா. இவர் இயக்கிய படங்களில் சேது, பிதாமகன், நந்தா, அவன் இவன், நான் கடவுள், பரதேசி போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளன.

இதைத்தொடர்ந்து மனைவியின் விவாகரத்து, தொடர் தோல்வி, நெகட்டிவ் விமர்சனங்கள் என்று  சினிமா கேரியரில் சரிவை சந்தித்தார் பாலா. அதன் பின்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலா இயக்கத்தில் தயாரான திரைப்படம் தான் வணங்கான்.

d_i_a

வணங்கான் படத்தில் முதலில் சூர்யா தான் நடித்தார். இதற்கான படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக சூர்யா இந்த படத்தில் இருந்து விலகினார். அதன்பின்பு அவருக்கு பதிலாக அருண் விஜய் நடிப்பதற்கு ஒப்பந்தமானார்.


இந்த படத்தில் அருண் விஜய் காது கேளாத வாய் பேசாத ஒரு நபராக நடித்துள்ளார். பல தடைகளைத் தாண்டி இந்த திரைப்படம் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது.

இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து அருண் விஜய்க்கு மாபெரும் வெற்றியை பெற்று கொடுத்த படமாக வணங்கான் திரைப்படம் அமைந்துள்ளது.


இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் கூறுகையில், அருண் விஜய் இந்த படத்தில் பேசாமலே நடித்துள்ளார். அதனை பார்ப்பதற்கு நன்றாக உள்ளது. ஆக்சன் ரீதியாகவும் எமோஷனல் ரீதியாகவும் அருண் விஜய் நன்றாக நடித்துள்ளார்.

இந்த படம் சூர்யாவுக்கு செட்டாகி இருக்காது. ஆனால் அருண் விஜய் பிச்சு  உதறிவிட்டாரு..  அருண் விஜயின் தங்கச்சி கேரக்டர் ரொம்ப அருமையா பண்ணி இருக்காங்க.. இந்த படத்தின் கடைசி கிளைமாக்ஸ் வேற லெவலில் இருந்தது. அருண் விஜய் இந்த படத்துக்காக நிறைய அவோர்ட் வாங்குவார் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Advertisement

Advertisement