• Dec 26 2024

சூர்யா 44க்கு வந்த முதல் சிக்கல்! சூர்யா கேட்ட உதவி! செய்ய மறுத்த அதர்வா!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் சூரியா இறுதியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இது கடந்த வாரம் ரிலீசாகி கலவையான விமர்சனத்தினை பெற்றுவந்தது. இதனால் வசூலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை.

Suriya 44 wraps shooting! Release details of Suriya, Karthik Subbaraj film:  Tamil Movie, Music Reviews and News

மட்டமான விமர்சனத்தினால் பல ரசிகர்களை இழந்தது கங்குவா.  சூர்யா தனது சினிமா கேரியரில் மொத்தம் 43 படங்கள் நடித்துள்ளார்.  இதில் 43 வது படம் கங்குவா அவருக்கு சிறப்பாக அமையவில்லை. சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் இந்த இரண்டு படங்கள்தான் அவருக்கு சமீப காலத்தில் ஹிட்டாக அமைந்துள்ளது.

Suriya 44 birthday special poster: Actor's blood-smeared look from Karthik  Subbaraj directorial enthralls fans | PINKVILLA

சமீபத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் கமிட்டான புறநானூறு படமும் அவர் நினைத்தவாறு அமையாததால் அதில் நடிக்க மறுத்துவிட்டார் சூர்யா. இப்பொழுது கார்த்திக் சுப்புராஜ் உடன் அடுத்த படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இந்த படத்தை சூர்யா 44 என கூறிவந்த நிலையில் இதற்கு டைட்டில் “கோல்ட்” என தேர்ந்தெடுத்துள்ளனர்.

Suriya's transformation in 'Suriya 44' teaser leaves fans guessing: Hero or  villain?, tamil, suriya, suriya new movie, surya movie, suriya 44, pooja  hedge, karthik subbaraj

ஆனால் அந்த டைட்டிலை பதிவு செய்யும் பொழுது அது நடிகர் அதர்வாவிடம் இருந்துள்ளது. இதனால் அதர்வாவை சந்தித்து அந்த டைட்டிலை வாங்க முற்பட்டனர். ஆனால் அதர்வா ஒரு படத்தை இயக்கப் போகிறார். அந்த படத்திற்கு இந்த டைட்டில் தான் பொருந்தும் என மறுத்துவிட்டாராம். இதனால் சூர்யா 44 விற்கு வேறு பெயர் தேடிவருகிறார்கள் சுப்புராஜ் கூட்டணி. 


Advertisement

Advertisement