2018ம் ஆண்டு வெளியான 'ரெய்டு' திரைப்படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, 'ரெய்டு 2' படம் உருவாகி வருகின்றது. இப்படத்தில் அஜய் தேவ்கன், வாணி கபூர் மற்றும் ரஜத் கபூர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'ரெய்டு 2' திரைப்படம் வருகின்ற மே மாதம் 1ம் திகதி தொழிலாளர் தினத்தன்று திரைக்கு வரவுள்ளது. ரசிகர்களிடையே இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்படுகின்றது. இந்நிலையில், 'ரெய்டு 2' படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடிகை தமன்னா நடனமாடியுள்ளார் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.
முன்னதாக, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற 'காவாலயா...' பாடலிலும், பாலிவுட்டில் 'ஸ்ட்ரீ 2' படத்தின் 'ஆஜ் கி ராத்...' பாடலிலும் தமன்னா சிறப்பாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருந்தார். அந்த அனுபவத்துக்குப் பிறகு, 'ரெய்டு 2' படத்தில் 'நாஷா..' என்ற பாடலுக்கு தமன்னா நடனமாடியுள்ளார். இந்த 'நாஷா' பாடல் நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது.
இதற்கான அறிவிப்பை தமன்னா தனது சமூக ஊடக பக்கங்களில் தற்பொழுது பகிர்ந்துள்ளார். தமன்னா வெளியிட்ட டீசர் மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் ஆவலையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கி உள்ளன. தற்போது 'நாஷா' பாடல் வெளியீட்டைத் தொடர்ந்து, 'ரெய்டு 2' படத்தின் டிரெய்லரும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படம் மே 1ம் திகதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் மனங்களைக் கவரும் என்பதில் சந்தேகமில்லை.
Sabke dil aur dimaag pe chadhega #Nasha!💃🔥
Song Out Tomorrow. #Raid2 knocking in cinemas on 1st May.@ajaydevgn @Riteishd @Vaaniofficial #RajatKapoor #SaurabhShukla #SupriyaPathak @amit_sial @rajkumar_rkg #BhushanKumar #KrishanKumar @KumarMangat @AbhishekPathakk… pic.twitter.com/kEnrvvNDIb
Listen News!