கடந்த 2023ம் ஆண்டு, நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் தான் 'ஜெயிலர்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்து உலகளவில் சாதனை படைத்திருந்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, 'ஜெயிலர் 2' உருவாகி வருகின்றது. இதில் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் சிறிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இதில் வில்லன் கதாப்பாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், 'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நோக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று விமானம் மூலம் கோவைக்குச் சென்றார். விமான நிலையத்தில் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, ரஜினிகாந்த் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்களைப் பகிர்ந்தார். அதன் போது அவர் கூறியதாவது, "20 நாட்கள் படப்பிடிப்பிற்காக கோவைக்கு வந்துள்ளேன். படத்தின் வெளியீட்டு திகதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை" என்றார்.
அத்துடன், இன்று திரையரங்குகளில் வெளியான அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' படத்திற்குத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாது 'ஜெயிலர் 2' திரைப்படம் தொடர்பான அப்டேட்டுக்களை எதிர்பார்த்துக் காத்திருங்கள்! என்றும் கூறியிருந்தார்.
Listen News!