• Oct 26 2024

சென்னை, பெங்களூரில் இந்திக்காரர்கள் இருக்கிறார்களா? ஏஆர் ரஹ்மானுக்கு குவியும் கண்டனங்கள்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில் நேற்று நடந்த முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய நிலையில் இந்த போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது என்பதும் சென்னை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் நேற்று முதல் போட்டி என்பதால் தொடக்க விழா மிகவும் பிரமாண்டமாக நடந்தது என்பதும் அதில் பல கலை நிகழ்ச்சிகள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒன்றாக ஏஆர் ரஹ்மானின் இசைக்கச்சேரி இடம்பெற்றது என்பதும் ஏஆர் ரகுமான் இந்த நிகழ்ச்சியில் அசத்தலாக சில பாடலை பாடினார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் அவர் மொத்தம் 9 பாடல்கள் பாடிய நிலையில் அதில் 6 ஹிந்தி பாடலையும் மூன்று தமிழ் பாடங்களை மட்டுமே பாடியதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். நேற்றைய போட்டி சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெறும் போது தமிழ் மற்றும் கன்னட பாடல்களை அதிகமாக அவர் பாடி இருக்கலாம் என்றும் தேவை இல்லாம ஹிந்தி பாடலை அவர் அதிகம் பாடியது சர்ச்சைக்குரிய உள்ளாகிதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ஏஆர் ரஹ்மான் தரப்பிலிருந்து இதற்கு விளக்கம் அளித்த போது இந்த நிகழ்ச்சியை நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பார்ப்பார்கள், இந்தியாவில் அதிகம் பேர் ஹிந்தி பேசுபவர்கள் என்பதால் தொலைக்காட்சியில் பார்க்கும் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் ஹிந்தியில் அதிக பாடல் பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும் தமிழ், கன்னட ரசிகர்கள் ஏஆர்ரஹ்மானுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement