• Dec 26 2024

தமிழக அரசின் திரைப்பட விருதுகள்! சிறந்த படம் தனிஒருவன்! சிறந்த நடிகர், நடிகை யார் தெரியுமா?

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் புதன்கிழமை மார்ச் 6ம் திகதி வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. 


தமிழக அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழக அரசு எம்.ஜி.ஆர். திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா புதன்கிழமை (மார்ச் 6) மாலை 6 மணிக்கு சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெறவுள்ளது.


விழாவில் 'தனி ஒருவன்' திரைப்படத்துக்கு சிறந்த படத்துக்கான முதல் பரிசு வழங்கப்படுகிறது. சிறந்த நடிகருக்கான விருது மாதவனுக்கு அளிக்கப்படுகிறது. சிறந்த நடிகைக்கான விருது நடிகை ஜோதிக்காவிற்கும் ஏனைய விருதுகள்  சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என வழங்கபடவுள்ளது.  

Advertisement

Advertisement