• Dec 26 2024

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்கிரமின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள "தங்கலான்" படத்தின் வெளியீட்டு தேதியினை நெருங்க நெருங்க நாளுக்கு நாள் வெளியாகும் அறிவிப்புகள் மற்றும் அப்டேட்கள் ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்புடன் திரையரங்குகளிற்கு அழைத்துச் செல்லும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

Official Trailer | Chiyaan Vikram ...

உண்மை கதையின் தழுவலை திரைக்கதையாய் வடிவமைத்திருக்கும் பா.ரஞ்சித் மற்றும் நடிப்பிற்கே தன்னை அர்பணித்திருக்கும் விக்ரம் வரலாற்று படங்களுக்கென்றே தன் மொத்த வித்தையையும் காட்டும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் என தமிழ் சினிமாவின் உச்சங்கள் இணைத்திருக்கும் இப் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் "தங்கலான்" படத்தின் அடுத்த பாடலானா 'வார் சாங்'  இன்று மாலை 5 மணிக்கு  வெளியாகவுள்ளதாக ப்ரோமோ வீடியோ மூலம் அறியத்தந்திருக்கிறார். பாடலின் ப்ரோமோ வீடியோவை பகிர்ந்து 'சம்பவம் இருக்கு' என பதிவையும் இட்டுள்ளார்.இப் பதிவு தற்போது சமூக வலைதளமெங்கும் வைரலாகி வருகிறது.


 

Advertisement

Advertisement