இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் "லவ் டுடே " ஹீரோ பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகிய "dragon" திரைப்படம் கடந்த வாரங்களில் வெற்றி நடை போட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாகிய "விடாமுயற்சி " படத்தினை தோற்கடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது உலகளவில் அஜித்தின் விடாமுயற்சி பட ஆல் டைம் வசூலை டிராகன் திரைப்படம் மூன்றே வாரத்தில் முறியடித்துள்ளது. இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் முதலிடத்தினை டிராகன் பிடித்துள்ளது. இந்த புதிய சாதனை டிராகன் படத்தின் தயாரிப்பாளர்கள் இயக்குநர் மற்றும் படக்குழுவின் முயற்சிகளை வெளிப்படுத்துகிறது.மேலும் இந்த படம் ரசிகர்களிடையே அதிரடியான வரவேற்பைப் பெற்றிருப்பதால் உலகம் முழுவதும் மிகுந்த பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
மேலும் "dragon " படம் 37 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 150 கோடி வரை வசூலித்துள்ளது. ஆனால் "விடாமுயற்சி" திரைப்படம் 350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெறும் 138 கோடிகள் மாத்திரம் வசூலிக்கப்பட்டு தோல்வியடைந்துள்ளது.
Listen News!