• Dec 26 2024

சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான்பா.. 'கூலி' க்கு கூலி இத்தனை கோடியா? விஜய்யை விட ஓவர் ஸ்பீட்டில் எகிறும் சம்பளம்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் தான் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. வசூலிலும் வேட்டையாடி இருந்தது.

இதை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். ஆனாலும் அந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. ரசிகர்களை ஏமாற்றம் அடையவே செய்தது. வசூலிலும் படு தோல்வி அடைந்தது.

இதை அடுத்து தற்போது வேட்டையன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 171 வது படமான கூலி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு காணப்படும்.


இந்த நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' திரைப்படத்தில் ரஜினி நடிப்பதற்காக அவர் வாங்கிய சம்பளம் பற்றிய விபரம் வெளியாகி  உள்ளது.


அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கும் 171வது படமான 'கூலி' படத்தில்  ரஜினிகாந்த் நடிப்பதற்காக 260 கோடி முதல் 280 கோடி வரை சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது நடித்து வரும் வேட்டையன் படமும் வெற்றி பெற்றால் இனிவரும் ரஜினியின் 172 வது படத்தின் சம்பளம் 300 கோடியை தாண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதே வேளை இளைய தளபதி விஜய்யும் தற்போது நடிக்கும் கோட் திரைப்படத்திற்கு 250 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement