• Dec 26 2024

விஜய் அரசியல் கட்சியில் சமந்தா - கீர்த்தி சுரேஷ்.. இந்த ரெண்டு பேரையும் விடவே மாட்டாரா விஜய்?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிக்கும் அடுத்தடுத்த படங்களில் சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் நிலையில் அவரது கடைசி படம் என்று கூறப்படும் ’தளபதி 69’ படத்தில் இருவரும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எச் வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகயிருக்கும் ’தளபதி 69’ திரைப்படம் ஒரு அரசியல் கதையை சார்ந்தது என்றும் விஜய் கட்சி ஆரம்பித்து பல எதிர்ப்புகளை சமாளித்து எப்படி ஆட்சியை பிடிக்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதைப்படி விஜய்யின் கட்சியில் சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் இணைவதாகவும் இருவரும் ஒருதலையாக விஜய்யை காதலிக்கும் நிலையில் யாரை கைப்பிடிக்கிறார் என்பது இந்த படத்தின் ஒரு கிளை கதை என்றும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து ’தளபதி 69’ திரைப்படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதே போல் இந்த படத்திற்கு தமன் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை முன்னணி திரைப்பட நிறுவனம் ஒன்றுடன் இணைந்து விஜய் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

விஜய்யுடன் ஏற்கனவே சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவருமே சில படங்களில் நடித்துள்ள நிலையில் மீண்டும் ஒருமுறை இணைய இருப்பதை அடுத்து இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைய இருப்பதாகவும் குறிப்பாக பான் இந்திய திரைப்படமாக இதை கொண்டு வருவதற்காக மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி நட்சத்திரங்களும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement