• Dec 26 2024

தவெக நிர்வாகிகளை திடீரென அழைத்த தளபதி விஜய்.. 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறதா?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய தளபதி விஜய் திடீரென கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் மூன்று முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் திரை உலகில் 200 கோடி ரூபாய்க்கு அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகரான தளபதி விஜய் திடீரென நடிப்பிலிருந்து விலகி அரசியலில் குதிக்க இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார். அவரது நடிப்பில் எச் வினோத் இயக்க இருக்கும் தளபதி 69 திரைப்படம் தான் அவருடைய கடைசி படம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவ்வப்போது தனது அரசியல் பணிகளை சத்தமில்லாமல் செய்து வரும் விஜய் திடீரென மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளை அழைத்திருப்பதாகவும் வரும் 18ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் முக்கிய கூட்டம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் வர இருப்பதை அடுத்து அன்றைய தினம் மாநிலம் முழுவதும் பிறந்தநாள் கொண்டாட்டம் எப்படி நடத்துவது? 10 மற்றும் 12ஆம்  வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவினை நடத்துவது மற்றும் மாநில அளவில் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்ப்பது ஒரு பட பல விஷயங்கள் 18ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது

மேலும் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி சேரலாமா என்பது குறித்து ஆலோசனை இருப்பதாக தெரிகிறது.

Advertisement

Advertisement