• Dec 26 2024

விஜய் டபுள் ஆக்சன் மட்டுமல்ல.. இதுவும் டபுள் தான்.. யுவன் கொடுத்த ‘கோட்’ அப்டேட்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ திரைப்படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் தந்தை, மகன் ஆகிய இரண்டு வேடங்களில் நடிக்கும் அவர் மகன் கேரக்டருக்காக அமெரிக்கா சென்று கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளில் ஈடுபட்டார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தளபதி விஜய்க்கு ‘கோட்’ திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பது மட்டுமின்றி முதல் முதலாக அவர் இரண்டு பாடல்களையும் இந்த படத்திற்காக பாடியுள்ளார் என்று வெளிவந்திருக்கும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே தளபதி விஜய் தான் நடிக்கும் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடி வருகிறார் என்பதும் கிட்டத்தட்ட அவர் பாடிய அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியது என்பதையும் ஏற்கனவே பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் ‘கோட்’ திரைப்படத்தில் தளபதி விஜய் ஒரு பாடலை பாடினார் என்றும் ’விசில் போடு’ என்ற அந்த பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சமீபத்தில் திரைப்பட விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யுவன் சங்கர் ராஜா ‘கோட்’ திரைப்படத்தில் முதன் முறையாக தளபதி விஜய் இரண்டு பாடல்களை பாடி உள்ளார் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ’விசில் போடு’ பாடலை தவிர இன்னொரு பாடலையும் அவர் பாடி இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக விஜய்யின் பிறந்தநாள் அன்று அந்த பாடல் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே ‘கோட்’ திரைப்படத்தை பொருத்தவரை தளபதி விஜய் டபுள் கேரக்டரில் நடித்தது மட்டுமின்றி டபுள் பாடலையும் பாடியுள்ளார் என்பது விஜய் ரசிகர்களுக்கு டபுள் சந்தோஷமான ஒரு தகவலாகும்.

Advertisement

Advertisement