• Dec 26 2024

தலைவா என்னை காப்பாத்து.. கள்ளக்குறிச்சி போன விஜய்யிடம் கண்ணீர் மல்கிய ரசிகர்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய நிலையில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமான பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் தமிழக அரசுக்கு அனைத்து எதிர்கட்சிகளும் திரையுலக பிரபலங்களும் கண்டனங்கள் தெரிவித்துள்ள நிலையில் முதல் நபராக தனது கண்டனத்தை நடிகர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு செய்தார் என்பதும் அந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று அதிகாலை தான் வெளிநாட்டில் இருந்து திரும்பிய விஜய் உடனடியாக கள்ளக்குறிச்சி செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய சொன்னதாகவும் இதையடுத்து இன்று மாலை அவர் கள்ளக்குறிச்சி சென்று மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் விஜய்யை பார்த்ததும் சிகிச்சை பெற்று வரும் ஒருவர் ’தலைவா என்னை காப்பாற்று’ என்று கண்ணீர் மல்க கெஞ்சி கேட்டுக்கொண்ட வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மக்களிடம் ஓட்டு வாங்கிய அரசியல்வாதிகள் கூட இன்னும் நேரடியாக கள்ளக்குறிச்சி செல்லாத நிலையில் விஜய் நேரடியாக சென்று சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement