• Dec 27 2024

சூர்யா பட வில்லனை களமிறக்கிய தளபதி 69.. ஆனா ஹீரோயின்கள் யாரு யாரு தெரியுமா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

இளைய தளபதியின் 69 ஆவது படத்தை இயக்குவதற்கு  எச். வினோத் தயாராகி உள்ளார். தற்போது இந்த படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி கொண்டுள்ளன. விஜயின் கடைசி படம் இது என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

பொதுவாகவே மார்க்கெட்டில் உள்ள ஹாட் சேல் யார் என்பதை வைத்து தான் முன்னணி நடிகர்கள் தங்களது படங்களில் நடிக்க உள்ள நடிகர்களை தேர்வு செய்து விடுவார்கள். ஆனால் வெங்கட் பிரபு கோட் படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக 90ஸ் கிட்ஸ்களின்  பேவரிட்களை ஒன்றாக இணைத்து இருந்தார்.

இந்த நிலையில், தளபதி 69 ஆவது படத்தில் அனிமல் படத்தில் மிகப்பெரிய வில்லனாக ஹிட் கொடுத்த பாபி தியால் நடிப்பதற்கு கம்மிட் ஆகியுள்ளார். இந்த தகவலை அதிகாரபூர்வமாகவே வெளியிட்டு உள்ளார்கள்.


பீஸ்ட் படத்தை கே ஜி எஃப் படம் புரட்டி எடுத்த நிலையில், அந்தப் படத்தில் வில்லனாக நடித்த சஞ்சய் தத்தை லியோ படத்திற்கு இறக்கி இருந்தார் விஜய். தற்போது அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான எச். வினோத்தையும், வில்லனுக்கு சூர்யாவின் கங்குவா படத்தில் நடித்துள்ள பாபி தியோலையும் களமிறக்கி உள்ளார்.


Advertisement

Advertisement