• Dec 26 2024

தளபதி விஜயின் தமிழக வெற்றி கழக கொடி அறிமுகம்... இதோ அந்த கொடி..

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் அவர்களின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி இணையத்தில் கொடிகட்டி பறக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆகஸ்ட் 22, காலை முதலே தமிழ் ரசிகர்கள் ஒரு விஷயத்திற்காக தான் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.


நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கி இன்று தனது கட்சி கொடி, பாடல் போன்றவற்றை வெளியிடுகிறார். காலை 9.15 மணிக்கு கட்சி கொடி காட்டப்படும் என நேற்றே அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது மக்கள் அனைவரும் ஆவலாக எதிர்ப்பார்த்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி இனையத்தில் வைரலாகி வருகிறது. 


சிவப்பு நிற கொடியில் நடுவில் மஞ்சள் நிற கொடு உள்ளது. கொடியின் இரண்டு பக்கத்திலும் இரண்டு யானைகள் முன் கால்களை தூக்கியபடி நிற்க நீல நிற குட்டி நட்சத்திரங்கள் வட்டமாக இருக்க சிவப்பு நிற பூ நடுவில் இருந்தவாறு கொடி அமைந்துள்ளது. இதோ அந்த கொடி... 

 

Advertisement

Advertisement