• Dec 25 2024

தளபதியின் வாரிசு இயக்கும் புதிய திரைப்படம்... சஞ்சயின் படத்தில் விஜய்... வெளியான நியூ அப்டேட்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்யின் வாரிசு அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் திரையுலகில் என்ட்ரி கொடுத்துவிட்டார். தனது தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகரை போல் இவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள நிலையில், இவருடைய முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.


சத்தமில்லாமல் வெளிவந்த இப்படத்தின் அறிவிப்பு ஷாக்கிங் ஆக இருந்தாலும் கூட யார்யாரெல்லாம் இப்படத்தில் நடிக்க போகிறார்கள் என எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி, இப்படத்தில் ஹீரோவாக கவின் நடிக்க கமிட்டாகியுள்ளார் என கூறப்படுகிறது. அதே போல் யுவன் ஷங்கர் ராஜா தான் சஞ்சய்யின் அறிமுக படத்திற்கு இசையமைக்கிறாராம். 


சமீபத்தில் தான் இப்படத்தின் பூஜை போடப்பட்டது. இந்நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.


கவின், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விஜய் சேதுபதி இவர்கள் மூவரும் இப்படத்தில் கமிட்டானதாக தகவல் வெளிவந்து இருந்தாலும் கூட இதுவரை தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளிவரவில்லை. 

Advertisement

Advertisement