• Dec 26 2024

ஒரு வழியா அப்டேட் கொடுத்த ‘தங்கலான்’ படக்குழு.. இனிமேலாவது விக்ரம் சுதாரிக்கணும்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே முடிவடைந்த நிலையில் இந்த படத்தை ரிலீஸ் செய்யாமல் தயாரித்து தரப்பு தாமதம் செய்வதாக தகவல் வெளியானது.

இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தான் சூர்யாவின் ’கங்குவா’ படத்தையும் தயாரித்து வருவதால் அந்த படத்திற்கு மட்டுமே கூடுதல் முக்கியத்துவம் கொடுத்ததாகவும் ‘தங்கலான்’ படத்தை கண்டு கொள்ளாமல் விட்டதாகவும் குற்றச்சாட்டு இருந்து வந்தது.

அதனால்தான் ‘தங்கலான்’ படத்தின் அப்டேட் வரவில்லை என்றும் தேர்தல் முடிந்தவுடன் இந்த படம் வெளியாகி இருக்க வேண்டிய நிலையில் இன்னும் ரிலீஸ் தேதி கூட அறிவிக்கப்படாமல் இருப்பது அறிந்து விக்ரம் ரசிகர்கள் உட்பட பல தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஒரு வழியாக தற்போது ‘தங்கலான்’ படத்தின் அப்டேட்டை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் டிரைலர் வரும் 10ஆம் தேதி அதாவது நாளை வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வெளியாகும் ‘தங்கலான்’ ட்ரெய்லரில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்போது தான் விக்ரம் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் இதுபோன்ற தயாரிப்பு நிறுவனத்திடம் மீண்டும் விக்ரம் சிக்கிக் கொள்ளக்கூடாது என்றும் விக்ரம் இனிமேலாவது சுதாரித்து கொள்ள வேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் தயாரிப்பு தரப்புக்கு ஆதரவாக சிலர் கூறியபோது, ‘ஒரு படத்தை எந்த நேரத்தில் ரிலீஸ் செய்தால் சரியாக இருக்கும்? எந்த நேரத்தில் ரிலீஸ் செய்தால் வசூல் அதிகமாக இருக்கும்? என்று கணக்கு போட்டு வைத்திருக்கும். இது ஒரு பிசினஸ் தந்திரம். அதன்படி தான் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. விக்ரம் ரசிகர்களின் குற்றச்சாட்டு எந்த விதமான முகாந்திரமும் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement