• Dec 25 2024

ஜிவியோட மியூசிக்கில் வெளியாகிறது தங்கலானின் அடுத்த பாடல் !

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணியிருக்கும் சியான் விக்ரமின் தங்கலான் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் திகதி உலக அளவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படக்குழு அடுத்தடுத்து வெளியிடும் அறிவிப்புகள் ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கிறது.

Thangalaan to hold grand audio launch ...

வெளியாக இன்னும் மூன்றே நாள் இருக்கும் நிலையில் படக்குழு வெளியீட்டிற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.வெளியாகியிருக்கும் பாடலின் வைப் அடங்குவதற்கு முன்னரே வெளியாகியிருக்கும் அடுத்த அறிவிப்பு படத்தின் ரசிகர்களை உற்சாகமூட்டியுள்ளது.

படம்

அதாவது இன்று மாலை 7 மணியளவில் வெளியாகிறது தங்கலான் படத்தின் அடுத்த பாடல்.ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் உருவாகியிருக்கும் "அறுவடை" பாடல் வெளியாவதாக அறிவித்திருக்கும் படக்குழு "நமது பழங்கால பாரம்பரியத்தின் ஒலிகளை விதைக்கும் அறுவடை" என்ற கேப்ஷனுடன் அறிவிப்பு போஸ்டரினை வெளியிட்டுள்ளது. 


Advertisement

Advertisement