• Dec 26 2024

வீட்டாருக்கு ஷாக் கொடுத்த பாக்கியா! தன் குடும்பத்திற்காக கணேஷ் செய்த காரியம்! அதிர்ச்சியில் உறைந்த அமிர்தா

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியல்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதில், கணேஷ் வீட்டிற்கு வருவதாக சொன்னதை தொடர்ந்து, வீட்டில் இருந்த எழில், அமிர்தவை கோவிலுக்கு போகுமாறு அவசர அவசரமாக அனுப்பி வைக்கிறார். ஆனாலும் அவர்கள் வெளியே கிளம்பும் போது கணேஷ் பார்த்து விட்டு அவர்களை பின் தொடர்ந்து போகிறார்.


மறு பக்கம், வீட்டில் அனைவரும் செழியனுக்கு தைரியம் சொல்லிக் கொண்டு உள்ளனர். ஈஸ்வரி டைவஸ் பத்தி பேசிக் கொண்டு இருக்க, டைவஸ் பத்தியே பேச வேணாம்.. நாம கொஞ்சம் பேசாம போவம் என சொல்ல, நானும் இப்படி தான் கோபி விசயத்துல இருந்தன். ஆனா அவன் கடைசில பாக்கியாவை டைவஸ் பண்ணிட்டு உன்ன கல்யாணம் பன்னினான் என சொல்ல, ஏன் அம்மா இப்ப இப்படி கதைக்கிறீங்க என கோபி கேட்கிறார்.


இதை தொடர்ந்து, எல்லாரும் இருக்க பாக்கியாவிடம் என்ன விஷயம் என கேட்கின்றனர். அதற்கு பாக்கியா, இது ஒரு மாசத்துக்கு மேல சொல்லாம வச்சி முழுங்கிட்டு இருக்கன். அமிர்தாட பழைய வாழ்க்கை தெரியும் தானே.. இப்போ அமிர்தாட முதல் கணவன் வந்துட்டான் என சொல்ல எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். பாக்கியா இதுவரையில் நடந்தவற்றை சொல்லுகிறார்.

இன்னொரு பக்கம், எழிலும் அமிர்தாவும் கோவிலில் இருக்க அவர்களை கணேஷ் பின் தொடருகிறார். அதன்பின்  இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் இருக்க அமிர்தா மட்டும், நிலாவுக்கு வேண்டுதல் இருக்கு என கோவிலுக்கு உள்ளே தனியாக செல்கிறார்.

இதை தொடர்ந்து, கோவிலுக்கு உள்ளே வந்த அமிர்தாவை கணேஷ் அழைக்க, அவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் அமிர்தா.. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement