• Jun 11 2026

பிளாஸ்ட் படத்திலிருந்து நீக்கப்பட்ட அபிராமியின் அந்த ஒரு காட்சி.! வைரலான புதிய வீடியோ!

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஆக்சன் நாயகனாக தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகர் தான் அர்ஜுன். இவர்  தற்போது ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், ஆக்சன் மற்றும் உணர்வுகளை இணைத்த குடும்ப கதையாக ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அப்பா – மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், அர்ஜுனுடன் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேஜிஎப் திரைப்படங்களின் இசையமைப்பாளர் ரவி பசூர் இசையமைத்திருப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

கடந்த 28ஆம் தேதி வெளியாகிய ‘பிளாஸ்ட்’, குடும்ப உறவுகள், உணர்ச்சிகள் மற்றும் அதிரடி காட்சிகளின் கலவையாக அமைந்ததால் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 


குறிப்பாக கராத்தே திறமையுடன் குடும்பத்தை காக்க போராடும் கதாபாத்திரத்தில் அர்ஜுனின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

திரையரங்குகளில் படத்திற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல இடங்களில் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உலகளவில் சுமார் 50 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக கூறப்படும் இந்த படம், வணிக ரீதியாகவும் வெற்றிப்பாதையில் பயணித்து வருகிறது.

இந்நிலையில், ‘பிளாஸ்ட்’ படத்தில்  நீக்கப்பட்ட அபிராமியின் காட்சி ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. பேருந்தில் நடைபெறும் விறுவிறுப்பான மோதல் காட்சியில் அபிராமியின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. "இவ்வளவு முக்கியமான காட்சியை ஏன் படத்தில் சேர்க்கவில்லை?" என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

தற்போது ‘பிளாஸ்ட்’ படம் வெற்றிநடை போட்டு வரும் நேரத்தில் வெளியான இந்த நீக்கப்பட்ட காட்சி, இந்த திரைப்படத்தை மீண்டும் பேசுபொருளாக மாற்றியுள்ளது.

Advertisement

Advertisement