• Jun 11 2026

அவ்வை சண்முகியான கோபி.. பாக்கியாவிடம் டவுட்டு கேட்டு மண்ணை கவ்விய தரமான சம்பவம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த வாரத்திற்கான கதைக்கள ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் கோபியும் ஈஸ்வரியும் வாக்கிங் போய்க் கொண்டு இருக்க ராதிகா பைக்கில் வெளியே வருகின்றார். இதன்போது ஈஸ்வரி கிளம்பிட்டிய என கேட்க, ஆமா ரெஸ்டாரண்டுக்கு என பாக்யா சொல்லிவிட்டு செல்கிறார். 

இதன் போது கோபி ஈஸ்வரியிடம் பாக்யா போன வீட்டு வேலை யார் பார்க்கிறது என்று கேட்க, வீட்டு வேலையை செய்துட்டு தான் பாக்கியா ரெஸ்டாரண்ட் போவா என சொல்லுகிறார்.


இதனால் நானும் அதனை செய்து காட்டுகிறேன் என அவ்வை சண்முகி போல நேரத்துக்கு எழுந்து ஈஸ்வரிக்கு சாப்பாடு கொடுத்து, தனது கிச்சனுக்கு சென்று அங்கேயும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார். மறுபடியும் ஈஸ்வரிக்கு சாப்பாடு, டைம்க்கு காபி கொடுத்து கிச்சனுக்கும் சென்று சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்.

மறுநாள் காலையில் பாக்கியா வாக்கிங் போய்க்கொண்டிருக்க அங்கு சென்ற கோபி, வீட்டையும் சமாளிச்சு ரெஸ்டாரன்டையும் சமாளிச்சு எப்படி மேனேஜ் பண்ணுகிறாய் என்று கேட்க, நீங்கதான் புத்திசாலி ஆச்சே எனக்கு தெரியாது என பதிலடி கொடுத்துவிட்டு செல்கிறார். இதுதான் இன்றைய தினம் வெளியான ப்ரோமோ..

Advertisement

Advertisement