• Dec 25 2024

எய்ட்ஸ் நோய்! சின்ன குடிசை! வேதனையில் நடிகை! சூப்பர்ஸ்டார் தான் ஒரே ஆறுதல்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

‘அருவி’ திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற திரைப்படம். இதில் நடிகை அதிதி பாலன் வெளிப்படுத்திய நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அப்படியான ஒரு நடிப்பை தான் வெளிப்படுத்திருப்பர். அருவி படத்திற்கு தனக்கு கிடைத்த வரவேற்பு இன்றளவும் அவருக்கு ஆச்சரியமான ஒன்றாக தான் இருக்கிறது என்றுமே அவர் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.


ஆனால் இதுகுறித்து பேசிய அதிதி பாலன், “அருவி என்னுடைய வாழ்க்கையை மொத்தமாக மாற்றிவிட்டது. குறிப்பாக அந்தப் படத்தில் எனக்கு எய்ட்ஸ் நோய் வந்து, உடல் மெலிந்து, முடியை வெட்டி இருப்பது போன்ற காட்சி இருக்கும். அந்தக் காட்சியை நாங்கள் ஒரு குடிசை வீட்டில் தான் எடுத்தோம் அந்தக்காட்சியை எடுக்கும் போது, அந்தப்படத்தின் கேமராமேன் அங்கு கேமராவை வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.”


அந்த குடிசைக்குள் நானும் இயக்குநர் அருணும் மட்டும்தான் இருந்தோம். அந்தக்காட்சியை நாங்கள் ஒரே டேக்கில் எடுத்து முடித்தோம். அந்தக்காட்சிக்காக நான் உடல் இளைத்தேன், முடியை வெட்டிக்கொண்டேன். ஒரு பெண்ணிற்கு முடிதான் அழகின் பிரதானம். அதையே வெட்ட சொல்கிறார்களே என்று எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது படப்பிடிப்பில் அவர்கள் முடியை வெட்டும் பொழுது என் நெஞ்சே உடைந்துவிட்டது.”


ரஜினி சார் என்னை ஃபிலிம் இன்ஸிடியூட்டில் படித்து விட்டு நடிக்க வந்தீர்களா? “இந்த சீனை எப்படி எடுத்தீர்கள் என்று அவ்வளவு ஆர்வமாக கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு அந்த வயதிலும் தொழிலை கற்றுக்கொள்ள இருக்கும் ஆர்வத்தை பார்த்து நான் வியந்தேன். அப்போது தான் முடி வெட்டியது எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்று புரிந்துகொண்டேன். அவருடைய பாராட்டு தான் எனக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement