• Dec 25 2024

ரூம் போட்டு கேம் யோசிக்கும் பிக் பாஸ்...! அடித்து பிடித்து கேப்டன் ஆனா போட்டியாளர்!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்ச்சில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது தற்போது 7 சீசன்களை கடந்து 8வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீசனில் ஒரு சில போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி வெளியே சென்று விட்டார்கள். அத்தோடு வையில் கார்ட் போட்டியாளர்களாக வந்தவர்களில் ஒரு சிலர் இருக்கிறார்கள். 


கடுமையான வாதம், போட்டி, விளையாட்டு என பல சுவாரஷ்யங்களுடன் ஓடிகொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வார கேப்டனாக தீபக் இருந்த நிலையில் கடும் விவாதங்கள் சண்டைகள் ஏற்பட்டது. இதனை அடுத்து இந்த வாரம் கேப்டன் தெரிவு நடைபெற்றுள்ளது. அதில் ஒழுங்காக போட்டியில் பங்கு பற்றிய போட்டியாளர்களாக சாச்சனா மற்றும் ஜெப்ரி தெரிவு செய்யப்பட்டனர்.  


இவர்கள் இருவருக்கும் தான் தற்போது போட்டி நடைபெறுகிறது. பிக் பாஸ் டிவியில் காட்ட படும் நம்பர் பிளேட்டை கண்டு புடிக்க வேண்டும் அதிக நம்பர் பிளேட் கண்டு புடிப்பவர் இந்த வார கேப்டன் என்று அறிவிக்கப்படுகிறது. சாச்சனா மற்றும் ஜெப்ரி அடித்து பிடித்து கொண்டு விளையாடுகின்றார்கள். கடைசியாக ஜெப்ரி நிறைய நம்பர் பிளேட்களை எடுத்து கேப்டனாக தெரிவாகிறார். 



Advertisement

Advertisement