• Jun 06 2026

தாயான பிறகு கேப்ரில்லாவின் வாழ்க்கையில் நடந்த பெரிய மாற்றம்.! குவியும் வாழ்த்துகள்!

Aathira / 13 hours ago

Advertisement

Listen News!

சின்னத்திரை ரசிகர்களின் மனதில் ‘சுந்தரி’ என்ற பெயரால் தனி இடத்தை பிடித்தவர் தான் நடிகை கேப்ரில்லா செலஸ். இவர் தற்போது தனது புதிய சாதனையால் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளார். 

‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான கேப்ரில்லா, தனது நகைச்சுவை திறமையால் ஆரம்பத்திலேயே கவனம் பெற்றார். பின்னர் குறும்படங்கள், சமூக வலைதள வீடியோக்கள் மற்றும் சில திரைப்படங்களில் நடித்தாலும், அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுத் தந்தது ‘சுந்தரி’ தொடர் தான்.

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த பெண் தனது விடாமுயற்சியால் உயர்ந்த நிலையை அடைவதை மையமாகக் கொண்ட அந்த தொடர், கேப்ரில்லாவை வீடு தோறும் அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமும் உருவானது.

இந்த நிலையில், நடிகை கேப்ரில்லா செலஸ் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் போது அதனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அந்த பதிவுகள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.


கடந்த ஆண்டு தொடரின் நிறைவுக்குப் பிறகு தனது கர்ப்பத்தை அறிவித்த கேப்ரில்லா, சமீபத்தில் பெண் குழந்தைக்கு தாயானார். குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான கட்டத்தை அனுபவித்து வரும் நிலையில், தற்போது புதிய கார் வாங்கியிருப்பது அவரது வாழ்க்கையில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

புதிய காருடன் குடும்பத்தினருடன் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் கேப்ரில்லாவின் இந்த புதிய சாதனை அமைந்துள்ளது.

Advertisement

Advertisement