• Jan 06 2025

எனக்கு பொண்ணு கொடுத்தது பெரிய விஷயம்! விஜய் டிவில இவ்வளோதான் சம்பளம்- சிவகார்த்திகேயன்

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ள நேசிப்பாயா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திரைப்படகுழு உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டு கலகலப்பாக பேசியிருந்தார்.


நடிகர் ஆகாஷ் முரளி - அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள "நேசிப்பாயா" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் திரைப்படம் குறித்து மேடையில் கலகலப்பாக பேசி இருந்தார். அவர் கூறுகையில் " வணக்கம் ஹாப்பி நியூ இயர் இந்த வருஷம் தொடக்கத்தில் நான் கலந்துகொள்ளும்  முதல் இசை வெளியீட்டு விழா இதுதான். ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவே இவ்வளவு பெருசா அழகா இருக்குன்னா படம் ரொம்ப நல்லா இருக்கும் என்று கூறினார். 


மேலும் "எனக்கெல்லாம் எங்க மாமா பொண்ணு கொடுத்ததே பெரிய விஷயம். எனக்கு நிரந்தரமான வேலை இல்ல அப்போ என்ன நம்பி பொண்ண கொடுத்தாங்க, விஜய் டிவில நான் வேலை செய்யும் போது ஒரு எபிசோடுக்கு 4500 ரூபாய் தான் கிடைக்கும். இப்போ அப்படி இல்லை விஜய் டிவி வளர்ந்துவிட்டது. அதோடு தொகுப்பாளர் பாலா கூட 1 லட்சம் வாங்கி இருப்பான் இந்த ஷோ பன்னுறதுக்காக" என்று கூறினார். இதனை கேட்டு அனைவரும் சிரித்து விட்டார்கள். 


மேலும் "சரத்குமார் சார் கூட அடுத்து ஒரு படம் பண்ணனும் சார் சூப்பரான கதையுடன் உங்கள சந்திக்கிறேன் சார். யுவன் சார் நீங்க கோட் சார் எப்போவுமே இசையுலகில் ராஜா நீங்க ஆரம்பத்துல இருந்தே புது ஹீரோ, புது இயக்குநர் படங்களுக்கு பாடல்கள் பண்ணிகொடுத்து இருக்கீங்க யு ஆர் கிரேட் சார். அதிதி அண்ட் ஆகாஷ் உங்களுடைய ஆக்ட்டிங் வேற லெவல் சோ இன்னும் நல்ல படங்கள் பண்ணுறதுக்கு வாழ்த்துக்கள்" என்று பேசியிருந்தார்

Advertisement

Advertisement