• Dec 26 2024

Vijay-க்கும் Vijayakanth-ற்கும் இடையிலுள்ள அண்ணன், தம்பி உறவை வார்த்தையால சொல்ல முடியாது! ஜாகுவார் தங்கம் பகிர்ந்த தகவல்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகில் ஒரு ஸ்டான்டட் சண்டை பயிற்சிவிப்பாளராக ஜாகுவார் தங்கம் காணப்படுகிறார். தனது 6 வயதில் இருந்தே சிலம்பம் மேல் ஆர்வம் கொண்டு, தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.

இந்த நிலையில், நடிகர் விஜயகாந்தின் இறுதி சடங்கில் கலந்து கொண்டதோடு, ஊடக சந்திப்பு ஒன்றையும் மேற்கொண்டுள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,  

"விஜய் சார் அப்பிடி அழுது நான் பார்த்ததே இல்லை  கேப்டன் விஜயகாந்துக்கும் விஜய்க்கும் இடையில் மிகுந்த பாசம் இருக்கு. இரண்டு பேருமே ஒருத்தர ஒருத்தர பற்றி பேசும் போது விட்டு கொடுக்காம புகழ்ந்து தான் பேசுவாங்க . 


விஜயகாந்தின் இறுதி சடங்களில், மிகுந்த வேதனையில், விஜய் சாரின் கண் எல்லாம் கலங்கி, மனம் உடைந்தவராவே விஜயகாந்தின் உடலிருந்த பெட்டி மேலே மாலை போட்டாங்க . அதை நான் நேரா நின்று பார்க்கும் போது இருவருக்கும் இருந்த அந்த பாச உணர்வு வெளிப்பட்டது . 

உதயநிதி வந்து 10 நிமிஷம் வெளிய நின்றாங்க , ஒரு அரசியல்வாதி வந்து வெளிய நின்றாங்க உள்ள போறதுக்கு எல்லாருக்கும் சரியா கஷ்டமாக இருந்திச்சி . அவ்வளவு கூட்டம் பிரபலங்கள் போக இன்னும் கஷ்டமா இருந்திச்சி அதனால தான் விஜய் தாமதமாகவே வந்தார் . விஜய் வந்தா இன்னும் கூட்டம் அதிகமாகிரும் என்று அவர் கூட்டம் குறைஞ்சிட்டா என்று கேட்டு தான் இரவு நேரம் வந்தார். என்று கூறியுள்ளார்.


மேலும், கடந்த காலத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு நடிகர் விஜயகாந்தும், நடிகர் விஜயும் வருவதாக இருந்தது. அந்த நேரத்தில், என்னிடம் பேசிய கேப்டன்,  தம்பி விஜய்க்கு மட்டும் பெரிய அளவில் கட்டவுட் வைக்குமாறு கூறினார். நானும் சந்தேகப்பட்டேன் ஒருவேளை கேப்டன் வர மாட்டாரோ என, அதுபோல நடிகர் விஜயும் அண்ணாவுக்கு மட்டும் கட்டவுட் அடிங்க என சொன்னார்.

இவ்வாறு, கேப்டன் உறுதியாக தம்பி விஜய்க்கு மட்டும் கட்டவுட் அடிக்க சொல்ல, நான் இறுதியாக இருவருக்கும் அடித்தேன்.. இறுதியாக அந்த நிகழ்விற்கு விஜய் வந்தார். ஆனால் விஜயகாந்த் நேரம் சென்று மேக் அப் உடனே வந்தார்.


நானும் உடனே, நீங்க வர மாட்டிங்க என்று நினைச்சன் என சொல்ல, நான் சொன்னா சொன்ன படி வருவேன், இப்போ சூட்டிங் முடிஞ்சு வர லேட் ஆகிட்டு என்றார்.

இவ்வாறு, இவரின் பாச பிணைப்பையும் பார்த்து நான் வியந்துவிட்டேன் என மேலும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement