• Dec 25 2024

இனியாவுக்கு பாக்கியா போட்ட கண்டிஷன்.. கோபி வாழ்க்கையில் மீண்டும் நுழைந்த பூகம்பம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  ராதிகா கோபியிடம் இனியாவின் விஷயத்தைப் பற்றி பேசுகின்றார். மேலும் இனியா ஆரம்பத்தில் சொல்லும் போது ஏன் நீங்கள் வேண்டாம் என்றீர்கள்? பிறகு எதற்கு சரி என்று சொன்னீர்கள் என்று துருவி துருவி கேட்கின்றார்.

மேலும் பாக்கியா வேண்டாம் என்று சொன்னபடியால் தானே நீங்கள் இனியா காம்பெடிஷனில் கலந்து கொள்ள சம்மதித்தீர்கள். ஆனால் இது இனியாவுக்கு நல்லது இல்லை. அங்கே ஏதும் பிரச்சினை என்றால் தான் உங்களிடம் வருகின்றார் என்று கோபிக்கு எடுத்துக் கூறுகிறார் ராதிகா. அத்துடன் ராதிகாவின் அம்மா வீட்டுக்கு வருகிறார். இதனால் கோபி அவர் ஏன் வந்தார் என சண்டை போட, ராதிகா ஒரு வழியாக சமாளிக்கிறார்.

மறுபக்கம் பாக்யா நைட் வந்து தூங்கும் போது இனியா குட் நைட் சொல்லவும் பாக்கியா எதுவும் பேசவில்லை. இதனால் தன்னுடன் பேசுமாறு இனியா சொல்ல, நீ உங்க அப்பா கிட்ட பெர்மிஷன் வாங்கி வந்துட்டா தானே.. என்ன நடந்தாலும் நான் முதல்ல சொன்னது தான் நடக்கும். மூன்று வருஷம் படிப்ப முடிச்ச பிறகு எதுஎன்றாலும் பார்க்கலாம் என்று கண்டிஷன் போடுகின்றார் பாக்யா.


இதை தொடர்ந்து அடுத்த நாள் எழில் வீட்டுக்கு வருகின்றார். பாக்கியாவை பார்த்துவிட்டு ஈஸ்வரியை பார்க்க செல்கிறார். தனக்கு தாத்தா போன பிறகு மரியாதை இல்லை என்று இனியா, செழியன் நடந்து கொண்ட விதம் பற்றி சொல்லி அழுகின்றார் ஈஸ்வரி.

அந்த நேரத்தில் இனியாவும் அங்கு வந்து தான் வேண்டுமென்று செய்யவில்லை என ஈஸ்வரியை கட்டிப்பிடித்து அழுகின்றார். அதன் பின்பு சமாதானம் ஆகின்றார் ஈஸ்வரி. எல்லாரும் ஹாலில்  இருந்து கதைத்துக் கொண்டிருக்க, இனியா எழிலுக்கு கண்ணை காட்டுகின்றார். அதன்படி எழிலும் இனியாவின் டான்ஸ் கம்பெடிஷன் பற்றி பேச்சை ஆரம்பிக்கின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement