• Dec 25 2024

த்ரிஷா மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்த மன்சூர்... மன்சூர் அலி கானை எச்சரித்த நீதிமன்றம்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த சில வாரங்களுக்கு முன் பேசுபொருளாக இருந்த விடையம் தான் திரிஷா - மன்சூர் விவகாரம். அதாவது நடிகர் மன்சூர் அலி கான் ஒரு பேட்டியில் பேசும்போது தான் லியோ படத்தில் நடிக்கிறேன் என்றதும் த்ரிஷா உடன் படுக்கையறை காட்சி இருக்கும் என நினைத்தேன் என கூறி மிகவும் அருவருப்பாக பேசியது சர்ச்சையாகி இருந்தது.


அதற்கு த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் மன்சூரை விமர்சித்து இருந்தனர். போலீஸ் வழக்குபதிவு செய்த நிலையில் மன்சூர் அலி கான் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.


அதன் பின் த்ரிஷாவுக்கு போலீஸ் கடிதம் அனுப்பிய நிலையில், மன்சூர் அலி கான் மன்னிப்பு கேட்டுவிட்டதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறி இருந்தார். இந்நிலையில் தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக த்ரிஷா, குஷ்பு உள்ளிடோர் மீது மன்சூர் அலி கான் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். 


ஒரு கோடி ருபாய் நஷ்ட ஈடும் மன்சூர் அலி கான் கேட்டிருக்கிறார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி மன்சூர் அலி கானை எச்சரித்து இருக்கிறார். த்ரிஷா தான் இவர் மீது வழக்கு தொடர்ந்து இருக்க வேண்டும். பொதுவெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை மன்சூர் அலி கான் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் நீதிபதி எச்சரித்து இருக்கிறார்.   

Advertisement

Advertisement