• Dec 26 2024

மனோஜ் தண்டச்சோறு என்று சரமாரியாக கிழித்த கஸ்டமர்! முத்து செய்த காரியத்தால் சுருங்கிப்போன விஜயா முகம்! மீனா ஹாப்பி

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட்  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், வீட்டிற்கு வந்த அண்ணாமலை விஜயாவிடம், மீனாவின் நகைகளை கொடுக்குமாறு கூற,  என்னமோ நான் அவ நகைகளை பிடுங்கி வச்சிருக்க மாதிரி எனக்கு சொல்றீங்க.. என்று வழமை போல மீனாக்கு எதிராக கத்துகிறார்.

அந்த நேரத்தில் அங்கு வந்த மீனா, இவை அனைத்தையும் கேட்டுவிட்டு, எனக்கு நகை ஒன்றும் வேண்டாம் மாமா என் புருஷன் நினைச்சா இப்பவே எனக்கு நகை வாங்கித் தருவார்.. அவரால் முடியும் என்று சொல்ல, ஆமா கார் ஓட்டி அவன் உனக்கு அறுபதாவது கல்யாணத்துல தான் வாங்கி தருவார் என்று திமிராக பேசுகிறார் விஜயா.


ஆனாலும் என் புருஷன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு, அவர் நினைச்ச இன்னைக்கே வாங்கி தருவார் என்று முத்து மேலே நம்பிக்கையாக கதைக்கிறார் மீனா.

இதைத்தொடர்ந்து முத்துவுக்கு சீட்டுப் பணம் கிடைக்க, அதில் மீனாவுக்கு தாலி வாங்க செல்கிறார்.

ஹோட்டலுக்கு வேலைக்கு சென்ற மனோஜ், அங்கிருந்து கொண்டு வேறு வேலைக்கு போக போனில் வேலை தேடுகிறார்.


அந்த நேரத்தில் ஹோட்டலுக்கு வந்த கஸ்டமர் ஒருவர் மனோஜிடம் தகராறு பண்ணுகிறார். இவனை எதுக்கு வேலைக்கு வச்சு இருக்கீங்க, சரியான தண்டச்சோறு என திட்ட, ஹோட்டல் மேனேஜர் ஒரு மாதிரி சமாளித்து அனுப்புகிறார்.

அந்த நேரத்தில் ரோகினியும் போன் பண்ணி, விடிய  சாப்பிடாமல் போயிட்டீங்க நல்ல ஹோட்டல் இருந்தா எதுவும் சாப்பிடுங்க என்ன சொல்கிறார்.

இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த முத்து, வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து, என் சொந்த காசுல மீனாக்கு தாலி வாங்கி வந்து இருக்கன் என்று சொல்ல, அண்ணாமலை, ரவி, சஸ்ருதி எல்லாரும் சந்தோஷப்படுகிறார்கள். விஜயா ஷாக்காகி இருக்கிறார்.

Advertisement

Advertisement