விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் ரச்சிதா மகாலட்சுமி. இவர் அதன் பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்..
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரச்சிதாவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி யாரிடம் எப்படி நடக்க வேண்டும் என்ற வாழ்க்கை பாடத்தை தான் கற்றுக் கொடுக்குமே தவிர பட வாய்ப்புகளைப் பெற்றுத் தராது.. நாமதான் அதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும் என்று ஓபன் ஆகவே பேட்டி கொடுத்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
d_i_a
இதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் கவர்ச்சி நாயகியாக அவதாரம் எடுத்தார் ரச்சிதா மகாலட்சுமி. அதன்படி கே எஸ் கே இயக்கத்தில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்த ஃபயர் படத்தில் ரச்சிதா மகாலட்சுமி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் இவர்களுடன் சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷா, சுரேஷ் சக்கரவர்த்தி, சிங்கம் புலி, பேட்மேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், ஃபயர் படத்தை இயக்கிய இயக்குநனர் ரச்சிதா பற்றியும் பாலாஜி பற்றியும் தற்போது வழங்கிய பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் அவர் பல விடயங்களை உடைத்து கூறியுள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், சரவணன் மீனாட்சி சீரியல் நடித்து பிரபலமானவர்தான் ரச்சிதா மகாலட்சுமி. இவர் ஏனைய நடிகைகள் போல் அல்ல..
ஒரு நாள் ஷூட்டிங் எடுத்துக் கொண்டிருக்கும் போது அங்கிருந்த டோர் அவருடைய தலைக்கு மேலே விழுந்தது. நாங்கள் எல்லோரும் பதவி போய் ஹாஸ்பிட்டல் போகலாம் என்று அழைத்தோம். ஆனாலும் அவர் எனக்கு ஒன்றும் ஆகவில்லை பரவாயில்லை இனி கொஞ்சம் பார்த்து பண்ண சொல்லுங்கள் என்று ஈஸியாக எடுத்துக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு சென்றார்.
இப்படி எந்த ஒரு நடிகையும் செய்ய மாட்டார்கள். மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே சாப்பாடு பரிமாறுவது எல்லோருடனும் கலகலப்பாக பேசுவது என்று ரச்சிதா மகாலட்சுமி மிகவும் இயல்பாகவே காணப்பட்டார்.
அதேபோலத்தான் பாலாஜிக்கும் இந்த படத்தை தயாரிக்கும் போது இது உனக்கு ஒரு வாய்ப்பாக தான் கொடுக்கப்படுகின்றது, சம்பளமாக 5 லட்சம் தான் கொடுக்கப்படும் என்று பேசித்தான் முடிவு எடுத்தோம்.
மேலும் இந்த படத்தில் பல நடிகைகள் நடித்த போதும் அதில் ரச்சிதா தான் ஹைலைட் ஆக காணப்படுகின்றார். இதனால் அவருடைய க்ளின்ஸ் வீடியோ ஒன்றை அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டோம். இதனால் தான் ஃபயர் படம் பற்றி எல்லா இடத்திற்கும் தெரியவந்தது.
அதற்கு காரணம் ரச்சிதாவை யாரும் அப்படி பார்த்து இருக்க மாட்டார்கள். ஆனால் அதனை நெகட்டிவ்வாக எடுத்துக் கொண்டார் ரச்சிதா. இதனால் தான் முரண்பாடு ஏற்பட்டது. பல தடவை அவருக்கு இது பற்றிய விளக்கமும் கொடுத்தேன். ஆனால் அதற்குப் பிறகு அவர்களுடைய விருப்பம் என்று விட்டுவிட்டேன்.
பாலாஜிக்கும் ஆரம்பத்தில் 5 லட்சம் தான் சம்பளம் என பேசப்பட்டது. ஆனால் அவர் இடை இடையே ஏற்பட்ட பண தேவையை என்னிடம் பூர்த்தி செய்தார். பின்பு திடீரென போஸ்ட் போட்டு சர்ச்சையும் ஏற்படுத்தி இருந்தார். எனினும் நடந்த விடையங்கள் இவைதான் என இயக்குநர் தற்போது விளக்கம் கொடுத்து உள்ளார்.
Listen News!