• Dec 25 2024

பொங்கல் சம்பவம் கன்ஃபார்ம்..!அஜித்திற்கு நன்றி தெரிவித்த இயக்குநர்..

Mathumitha / 2 days ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் படப்புடிப்புக்கள் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அஜித்துடன் இணைந்து திரிஷா,அர்ஜுன் ,ரெஜினா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தினை எதிர்வரும் பொங்கல் தினத்தன்று வெளியிடுவதற்கு படக்குழு தீர்மானித்துள்ளது.


அனிருத் இசையமைப்பில் லைக்கா நிறுவனம் இதனை தயாரித்துள்ளதுடன் நீண்ட நாட்களாக ஆரம்பமாகிய இப்பட தயாரிப்பு பணிகள் பல பிரச்சனைகளின் மத்தியில் தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில் இயக்குநர் தனது x தள பக்கத்தில் நடிகர் அஜித்குமார் அவர்களிற்கு நன்றி சொல்லும் முகமாக ஒரு டுவிட் ஒன்றினை பகிர்ந்துள்ளார்.


குறித்த பதிவில் "10-01-2025 சம்பவம் கன்ஃபார்ம்"மற்றும் "இவ் படத்தினை முடிப்பதற்கு பெரிதும் உதவியதற்கும் உங்களது பாசத்திற்கும் அரவணைப்பிற்கும் மனமார்ந்த நன்றிகள் அஜித் சேர்"என மிகவும் அழகான புகைப்படம் ஒன்றினை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement