• Dec 26 2024

சுத்த சூனியமான லைகா நிறுவனத்தின் கனவு.. தவிடுபொடியான இந்தியன் 2 வசூல்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு பெரிய ஸ்டாரான கமலஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் கூற வேண்டும்.

1996 ஆம் ஆண்டு இந்தியன் படம் எடுக்கப்பட்டது. அதன் இரண்டாம் பாகமாக கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, சித்தார்த், எஸ்.ஜே சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா  பவானி சங்கர் உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்த இந்த  படத்தை, கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக ப்ரோமோஷன் செய்து வெளியிட்டார்கள். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இதன் ப்ரோமோஷன் பணிகள் செய்யப்பட்டன.


இவ்வாறு பிரம்மாண்டமாக வெளியான இந்த திரைப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 26 கோடிகளும், இரண்டாவது நாளில் 18.2  கோடியும், மூன்றாவது நாளில் 15. 35 கோடியும் வசூலித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது இந்தியன் 2 படத்தின் நான்காம், ஐந்தாம் நாட்களில் வசூல் விபரத்தின்படி தலா மூன்று கோடி ரூபாய் படி ஆறு கோடிகளை வசூலித்துள்ளதாம். அதன் அடிப்படையில் இந்த திரைப்படம் 65.15 கோடிகளை வசூலித்துள்ளது.

லைகா நிறுவனம் இந்த படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த நிலையில், தற்போது அந்த நிறுவனத்திற்கு பெரிய இழப்பு இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement