• Dec 26 2024

பட்டு புடவை போர்த்தி இறுதிகிரியை செய்யும் அண்ணன்கள்... 'மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பாடி பிரியாவிடை கொடுத்த குடும்பத்தினர்...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

சினிமா துறையில் தனது இசையின் மூலம் பிரபலமானவர் தான் இசைஞானி இளையராஜா. அவரது மகள் பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் மரணம் அடைந்துள்ளார். அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்பில் உள்ள இளையராஜாவிற்கு சொந்தமான பண்ணை வீட்டில் பணிகள் நடந்து வந்த நிலையில். 

 சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் லோயர் கேம்ப் இருக்க கூடிய அவரது பண்ணை வீட்டில்  உறவினர் ,மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பல பிரபலங்களும் வருகை தந்து அஞ்சலி செலுத்தினர். அத்தோடு தற்போது இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. 


பவதாரிணி உடலுக்கு பட்டு சேலை போர்த்தி அண்ணன்கள் இறுதி சடங்கை செய்கின்றனர். அதுமட்டும் அல்லாது பவதாரிணி குரலில் ஒழித்து விருதை வென்ற பாடலான மையில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை குடும்பத்தினர் அனைவரும் இணைந்து கண்கள் கலங்க பவதாரிணி உடலை சுற்றி நின்று 'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடல் பாடி பிரியாவிடை கொடுத்தனர். இந்த நிகழ்வானது பார்ப்போரை மணங்களங்கவைத்தது. 


Advertisement

Advertisement