• Apr 17 2026

பீச்சில் வெட்கமின்றி குப்பை அள்ளிய பிரபல நடிகை ... காதலில் விழுந்த ரசிகர்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

'கண்ட நாள் முதல்' என்ற  மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் நடிகை ரெஜினா. அதன்பின் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலம் ஆனார்.

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் அதிக கவனம் செலுத்த தொடங்கிய ரெஜினா, தமிழில் அவ்வப்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

தமிழில் விஷால் நடிப்பில் வெளியான 'சக்ரா' திரைப்படத்தில் வில்லி ரோலிலும் நடித்திருந்தார். அதில் பலரது பாராட்டுகளையும் பெற்றார். 


இவ்வாறாக சினிமாவில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தனது சமூக வலைத்தளங்களிலும் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார் ரெஜினா.

இந்த நிலையில், தற்போது சமூக சூழலை சுத்திகரிக்கும் வகையில் இளம் வட்டாரத்துடன் இணைந்து கடற்கரை ஒன்றை துப்புரவு செய்துள்ளார் ரெஜினா.

அதன்படி தான் பெரிய நடிகை என்று கர்வம் கொள்ளாமல், கடற்கரையில் இருந்த கழிவுகளை சுத்தம் செய்து ஏனையோருக்கு முன்மாதிரிகையாக இருந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் புடவையில் அழகா இருக்கீங்க என்று சொல்லி காதலில் விழுந்த கமெண்ட்களை குவித்து வருகிறார்கள். தற்போது இது தொடர்பிலான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement