• Dec 25 2024

ஜீ தமிழ் சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை! ஏன் தெரியுமா? அவருக்கு பதில் யாரு தெரியுமா?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் ஷுதமிழல் ஹிட்டாக ஓடி முடிவடைந்த சீரியல் தான் நீ தானே எந்தன் பொன் வசந்தம்.

இந்த சீரியலில் கதாநாயகனாக நடிகர் ஜெய் ஆகாஷ் நடித்திருந்தார். இதில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் தர்ஷனா அசோகன். இந்த சீரியலில் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

இதனை அடுத்து தற்பொழுது ஜீ  தமிழல் ஒளிபரப்பாகும் கனா என்னம் சீரியலில் நடித்து வருகின்றார். இந்த சீரியலும் இவருக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது.


இந்த நிலையில், கனா சீரியலில் அன்பரசி கேரக்டரில் நடித்து வந்த தர்ஷனா அசோகன் தற்போது அதிலிருந்து விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் கனா சீரியல். இந்த சீரியலில் ஹீரோயினாக தர்ஷனா நடித்து வந்தார். தற்போது அவர் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக டோனிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை தற்போது கனா சீரியல் நடித்து வந்த தர்சனாவுக்கு திருமணம் கைகூடியுள்ள காரணத்தினாலே இந்த சீரியலில் இருந்து அவர் வெளியேறியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement